சீனாவின் சன்யா நகரில் உள்ள துறைமுகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் கர்னல் ஜியாங் பின்னை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் எட்டு ‘PNS ஹங்கோர்’ ரக நீர்மூழ்கி கப்பல்களை, 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தயாரிப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, நான்கு நீர்மூழ்கி கப்பல்கள் சீனாவிலும், மீதமுள்ள நான்கு கப்பல்கள் பாகிஸ்தானிலும் தயாரிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் ஏற்கனவே சீனாவிடம் இருந்து போர் விமானங்கள், தொலைதூர ஏவுகணைகள், பாதுகாப்பு பீரங்கிகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற அதிநவீன ராணுவ தளவாடங்களை வாங்கிப் பயன்படுத்தி வருகிறது.
இந்த வரிசையில் தற்போது சீனாவுடன் பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டமானது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவுக்கு ஒரு புதிய கடல்வழி அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று பாதுகாப்பு துறை நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
