உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சகர் மாவட்டத்தில், ஏழை நபர் ஒருவரை ஒரு கும்பல் நடுரோட்டில் மிகக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், மர்ம நபர்கள் சிலர் ஒரு ஏழை மனிதரை இரக்கமின்றி அடிப்பதோடு மட்டுமல்லாமல், அவரைத் தரையில் விழவைத்துத் தங்களின் செருப்பை நக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.
வலியால் துடித்த அந்த நபரின் முகத்தில் ஒருவன் கொடூரமாக உதைக்கும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் எவ்வளவோ கெஞ்சியும், அந்த கும்பல் அவரைத் தொடர்ந்து அராஜகமாகத் தாக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி விவாதத்தைக் கிளப்பியதை அடுத்து, புலந்த்சகர் போலீசார் இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்துள்ளனர்.
வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் தக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
குற்றவாளிகள் மீது தகுந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களைக்கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுப் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
यूपी: बुलंदशहर में दबंग युवक गरीब से चप्पल चटवा रहा है। पीट भी रहा है। मुंह पर लात भी मार रहा है। पीड़ित गरीब हाथ जोड़कर माफी मांगता जा रहा है।
मगर दबंग तो दबंग हैं…हाथ जोड़ने का कहा असर पड़ेगा। पुलिस इन दबंगों की तलाश में जुट गई है। pic.twitter.com/WfGxFwjpHS— Shahnawaz(News24) (@Shahnawazreport) May 18, 2026
“>
மேலும், தலைமறைவாக உள்ள அந்த கும்பல் விரைவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.
