பஞ்சாப் மாநிலம் சமராலாவில் பட்டப்பகலில் அரங்கேறிய அதிர்ச்சிகரமான செயின் பறிப்புச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தனது கைக்குழந்தையுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை குறிவைத்த மர்ம நபர்கள் இருவர், பைக்கில் மின்னல் வேகத்தில் வந்து அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தனர்.

இந்தத் திடீர் தாக்குதலில் நிலைதடுமாறிய அந்தப் பெண்ணும், குழந்தையும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அந்தத் திருடர்களை விரட்டிச் சென்றும், அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த முழுச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. குற்றவாளிகளைப் பிடிக்கப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.