ஒரு நகர்ப்புற குப்பைக் கிடங்கில் தனக்குத் தேவையான பழையப் பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், உடைந்த பொருட்கள், பழைய இயர்போன் மற்றும் சில பெண்களின் கைப்பைகள் மட்டுமே அவருக்குக் கிடைத்தன. ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக குப்பைகளுக்கு நடுவே ஒரு வளையல் அவரது கண்ணில் பட்டது.
மேலும் முதலில் சாதாரண உலோகம் என்று நினைத்த அவர், உற்று நோக்கியபோது அது தங்கமாக இருக்கலாம் என்று சந்தேகித்து அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது தாயாரிடம் காட்டினார். அவரது தாயாரும் அது அசல் தங்கம் போலவே இருப்பதாகக் கூற, அதனை உறுதி செய்ய ஒரு நகைக்கடைக்கு எடுத்துச் சென்றார்.
View this post on Instagram
“>
இதனால் நகைக்கடையில் அந்த வளையலைச் சோதித்தபோது, அது 14 கேரட் அசல் தங்க வளையல் என்பது தெரியவந்தது. மேலும், அந்த வளையலை விற்றதன் மூலம் ஓம்காருக்கு உடனடியாக 8,000 ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைத்தது. குப்பையிலிருந்து கிடைத்த இந்த அதிர்ஷ்டத்தைக் கண்டு சமூக ஊடகவாசிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த வீடியோ ஓம்காரின் அதிர்ஷ்டத்தை மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையை நடத்த குப்பைக் கிடங்குகளில் கடினமாக உழைக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் நமக்கு நினைவூட்டுகிறது. பணக்கார குடும்பங்கள் அவசரத்திலோ அல்லது அலட்சியத்திலோ தூக்கி எறியும் சில பொருட்கள், எதிர்பாராத நேரத்தில் ஏழைகளின் வாழ்க்கையை மாற்றும் புதையலாக மாறிவிடுகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே நிஜமான சான்றாகும்.
