மத்தியப் பிரதேசத்தில் இரண்டு போலீசார் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்த்வா மாவட்டத்தில் உள்ள பாலாஜி தாம் காலனி பகுதியில், அன்சிங் நர்காவே என்ற காவலர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் ஐந்து நாட்கள் விடுப்பில் இருந்தபோது இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல்,ஒரு பழைய போலீஸ் அவுட்போஸ்ட்டில், தருண் காந்தர்வ் என்ற மற்றொரு காவலர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவர் நவ்கான் காவல் நிலையத்திலேயே பணியாற்றி வந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு போலீசார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
