“தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் விவகாரத்தில், தவெக அரசு அதிரடிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கோவையில் தற்பொழுது  வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார்.

‘டாஸ்மாக் துறையில் ஆண்டுக்கு சுமார் 3,600 கோடி ரூபாய் அளவிற்கு மெகா ஊழல் நடந்துள்ளது; மாதந்தோறும் 100 கோடி ரூபாய் வரை தனி நபர் கணக்குகளுக்குச் சென்று கொண்டிருந்த போதைப்பொருள் சங்கிலியைத் தவெக அரசு தற்பொழுது அடியோடு உடைத்தெறிந்துள்ளது’ எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ‘இனிமேல் மதுபான பாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால் துறை ரீதியாகக் கடுமையான ஆக்ஷன் எடுக்கப்படும்’ என எச்சரித்த அவர், கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட 600 பேருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு, முந்தைய திமுக ஆட்சியைக் குறிவைத்து அடிக்கப்பட்ட அரசியல் சவுக்கடியாகப் பார்க்கப்படுவதால் கோட்டை வட்டாரமே தற்பொழுது நிலைகுலாய்ந்து போயுள்ளது.”