பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்பொழுது ஒரு மிக முக்கிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி (P.T.) வகுப்புகள் இனி கட்டாயமாக எடுக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.
மேலும், உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களுக்கென ஒதுக்கப்படும் பாட வேளைகளை (Periods) எவ்வித தொய்வுமின்றி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மாணவர்களுக்குச் சிறப்பு விளையாட்டுக்கள் குறித்த முறையான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தற்பொழுது அதிரடியாக அறிவுறுத்தியுள்ளது.
கல்விக்கு இணையாக விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், பலத்த வரவேற்பையும் பெற்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
