மும்பையின் புகழ்பெற்ற மரைன் டிரைவ் கடற்கரையில், அலைகளால் கரைக்கு அடித்து வரப்பட்ட ஒரு பிரம்மாண்டமான மர்ம உயிரினம் பாறைகளுக்கு இடையே சிக்கிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் பலரும் அது ஏதோ கடல் அரக்கன் அல்லது திமிங்கலம் என நினைத்து திகைத்துப்போய் அங்கு பெருங்கூட்டமாகக் கூடினர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் ஒளிரும் மேலங்கிகள் மற்றும் முகக்கவசங்கள்அணிந்த பாதுகாப்புப் பணியாளர்களும், மீட்புக் குழுவினரும் கயிறுகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாறைகளுக்கு நடுவே சிக்கியிருந்த அந்த உயிரினத்தை அதிரடியாக மீட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by DK Bhai Gupta Mumbai (@dk_bhai_gupta_mumbai)

“>

மீட்புக்குப் பின் நடத்தப்பட்ட சோதனையில், அது எந்தவொரு மர்ம கடல் அரக்கனும் அல்ல; அழியும் விளிம்பில் இருக்கும் ஒரு ‘இந்தியப் பெருங்கடல் கூன்முதுகு டால்பின்’ என்பது அம்பலமானது. துரதிர்ஷ்டவசமாக, கரை ஒதுங்கிய அந்த டால்பின் ஏற்கனவே இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கடல் மாசுபாடு அல்லது கப்பல்கள் மோதியதால் அது இறந்திருக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், டால்பினின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மீட்புக் குழுவினர் டால்பினை மீட்கும் இந்த நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் கவலையையும் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.