பீகார் மாநிலம் கட்டிகார் ரயில் நிலையத்தில், வெள்ளரிக்காய்களுக்குச் செயற்கையான பச்சை நிறத்தைப் பூசி பயணிகளுக்கு விற்பனை செய்யும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரயில் நிலையத்தின் 7 மற்றும் 8-வது நடைமேடைகளில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், இரண்டு பெண் வியாபாரிகள் வெள்ளரிக்காய்கள் பசுமையாகத் தெரிவதற்காக அதன் மீது ஒரு ரசாயனப் பொருளைப் பூசுவது தெளிவாகத் தெரிகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.
ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், வெள்ளரிக்காய் கூடைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, வீடியோவில் இருந்த பெண் உட்பட மொத்தம் ஒன்பது பெண் வியாபாரிகள் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
This is really harmful we must think twice before eating such street foods next time
— BALLABHA (@BALLABHA_CH) May 8, 2026
“>
பயணிகளின் உயிருடன் விளையாடும் இத்தகைய செயல்களைத் தடுக்க, ரயில்வே நிர்வாகம் அனைத்து நிலையங்களிலும் முறையான உணவுப் பாதுகாப்பு சோதனைகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
