தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு திமுக தரப்பில் இருந்து எந்தவிதமான இடையூறுகளும் இருக்காது என்பதை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தவெக-விற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கரம் நீட்டியுள்ளதால், ஆத்திரமடைந்த பாஜக ஆளுநரைப் பயன்படுத்தி ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை போடுவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜகவின் இத்தகைய தாமதப்படுத்தும் அரசியல் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும், ஆளுநர் மாளிகையை வைத்து டெல்லி அரசியல் சதுரங்கம் ஆடுவதாகவும் அவர் சாடியுள்ளார். ஸ்டாலின் காட்டியுள்ள இந்த ‘க்ரீன் சிக்னல்’ மற்றும் திருமாவளவனின் இந்தப் பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், விஜய்யின் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை வரவழைத்துள்ளது.
