நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்தும் ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரின் செயல், தமிழக மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடுமையாகச் சாடியுள்ளார். “பெரும்பான்மையைச் சட்டப்பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல” என உச்சநீதிமன்றத்தின் புகழ்பெற்ற எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டி அவர் ஆளுநருக்குப் பாடம் புகட்டியுள்ளார்.
சட்ட விதிகளையும், நீதிமன்றத் தீர்ப்பையும் நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த மாநிலத்தையே அவமதிக்கும் செயல் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் தீர்ப்புக்கு உரிய மரியாதை கிடைத்தாக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாக கமலின் இந்த அதிரடி எண்ட்ரி தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
