மகாராஷ்டிராவில் நடந்த ஒரு விசித்திரமான திருமண நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த ஐடி துறையில் பணியாற்றும் இரட்டை சகோதரர்கள், சிறுவயது முதலே எதிலும் பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்து வந்துள்ளனர். இந்த பிணைப்பின் காரணமாக, அவர்கள் இருவரும் பிங்கி என்ற ஒரே பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
மேலும் இவர்களது முடிவிற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், தாராளமான முறையில் இந்தத் திருமணம் நடைபெற்று முடிந்தது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், இந்தத் திருமண செய்தி வெளியானதும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரே பெண்ணை இருவர் திருமணம் செய்வது சட்டப்படியும், சமூக ரீதியாகவும் தவறானது என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இது குறிப்பாக, மணமகளின் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், இது போன்ற செயல்கள் சமூகத்தின் கலாச்சார விழுமியங்களைச் சீரழிப்பதாகக் கூறி ஆவேசமடைந்துள்ளனர். இந்தத் விவகாரம் தற்போது காவல்துறையின் கவனத்திற்குச் சென்றுள்ளதால், இது தொடர்பாக சட்டப்பூர்வமான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
