தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், மக்கள் ‘கூட்டணி ஆட்சி’ முறையையே விரும்புவதை உறுதிப்படுத்தியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழக அரசியல் களத்தில் ஒரு கட்சி ஆட்சி முறைக்கு மாற்றாக, அதிகாரப் பகிர்வுடன் கூடிய ‘கூட்டணி ஆட்சி’ அமைய வேண்டும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழிந்தது.

எங்களின் இந்தக் கொள்கையைத் தற்போது தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். மக்களுக்கு நன்றி. பத்தாண்டு காலக் கனவை நனவாக்கும் வகையில், விசிக-வின் நிலைப்பாட்டை வழிமொழிந்துள்ள தமிழக வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடக்கி வைத்துள்ளது இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.