இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த பிராச்சி என்ற இந்தியப் பெண், அங்குள்ள அன்றாட வாழ்க்கை முறையைப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவிலிருந்து, 32-வது இடத்தில் இருக்கும் சிங்கப்பூருக்குச் சென்ற அவர், அங்குள்ள தூய்மையான நடைபாதைகள், பசுமையான கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்பான சூழலைப் பார்த்து வியந்துபோயுள்ளார்.
“குழந்தைகளை விட நாய்கள் அதிகம்”, “இயக்கம் ஒரு சிகிச்சை போன்றது” மற்றும் “மிகவும் பாதுகாப்பான நகரம்” என சிங்கப்பூரின் சிறப்புகளை அவர் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும், குறிப்பாக இந்தியர்கள், சிங்கப்பூரின் நகரத் திட்டமிடலை இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“நடைபாதைகளைப் பார்த்தாலே இந்தியர்களுக்கு அழுகை வரும்” என்றும், “பொருளாதார வளர்ச்சி மட்டும் போதாது, பொது இடங்கள் மக்கபயன்பாட்டிற்கு வசதியாக இருக்க வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
“>
ஒரு நகரம் எவ்வளவு வேகமாக இயங்கினாலும், அது எப்படி அமைதியாகவும் நேர்த்தியாகவும் இருக்க முடியும் என்பதற்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த உதாரணம் என இந்தப் பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
