அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பதற்றம் குறையவில்லை. பாகிஸ்தானில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடப் போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்கள் ஈரானிடம் முன் அனுமதி பெற்று கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், மீறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மோதலில் அமெரிக்காவுக்குப் பெரிய அதிர்ச்சியாக, பாகிஸ்தான் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்ப்பது போலக் காட்டிவிட்டு, ரஷியா மற்றும் சீனாவுடன் ஈரான் வர்த்தகம் செய்ய ஏதுவாக 6 புதிய தரைவழிப் பாதைகளை பாகிஸ்தான் திறந்துவிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் தோல்வியடையும் சூழல் உருவாகியுள்ளதால், ஆத்திரமடைந்த டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தான் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.
