மதுப்பழக்கம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும் பலர் அதைத் தொடர்கின்றனர். ஆனால், மதுவை முழுமையாகக் கைவிடுவது ஒரு மனிதனின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் என்று ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

நாம் ஆரோக்கியமாக வாழ முயற்சிக்கும்போது, தெரிந்தே ஒரு நச்சைப் உடலில் செலுத்துவது அர்த்தமற்றது என்று அவர் கூறுகிறார். மதுவை நிறுத்துவதால் மூளை தெளிவடைந்து, காலை நேரங்களில் சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. மேலும், ஒவ்வொரு நாளையும் ஒரே சீரான மனநிலையுடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள இது உதவுகிறது.

மதுவை விடுவது மன ரீதியாகவும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உணர்ச்சிகள் கட்டுக்குள் வருவதால் மற்றவர்களுடனான உறவு மேம்படுவதோடு, தெளிவான தகவல் தொடர்பும் சாத்தியமாகிறது. “மது நமக்கு எதை தருவதாக வாக்களிக்கிறதோ, அதை மதுவில்லாத தெளிவான வாழ்க்கை உண்மையில் தருகிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Jeremy London, MD (@drjeremylondon)

“>

வாழ்க்கையின் இன்ப துன்பங்களை மதுவின் துணையின்றி நேரடியாக அனுபவிப்பதே ஒரு மனிதனுக்கு உண்மையான முதிர்ச்சியையும் மன அமைதியையும் தரும் என்பது அவரது கருத்தாகும். மதுவை ஒழிப்பது என்பது அவர் எடுத்த மிகச்சிறந்த முடிவு என்றும், மற்றவர்களும் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.