இணையத்தில் ஒரு வீடியோ வைரலானால் போதும், நெட்டிசன்கள் அதை வைத்து செய்யும் மீம்ஸ்களுக்கும் கமெண்ட்களுக்கும் அளவே இருக்காது.
அந்த வகையில் தற்போது கொல்கத்தாவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. அந்த வீடியோவில், ஒரு வெளிநாட்டு பயணிக்கு 5 நிமிடம் லிப்ட் கொடுத்த நபர், அதற்காக இந்திய ரூபாய் மதிப்பில் 2000 ரூபாய் கேட்டதுதான் இப்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
अंग्रेजो ने जो भारत का धन लूटा हैं उसको यही आदमी वापस लाएगा😂😂
5 मिनट की राइड के 2000 रुपये 😂
वीडियो कोलकाता का बताया जा रहा है। pic.twitter.com/2QV9iKf7oe
— Priya singh (@priyarajputlive) April 30, 2026
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற செல்வத்தை இவர்தான் வட்டியும் முதலுமாகத் திரும்பக் கொண்டு வருவார் போலிருக்கிறது” என நக்கலாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
5 நிமிடப் பயணத்திற்கு இவ்வளவு பெரிய தொகையா என ஒருபுறம் அதிர்ச்சி நிலவினாலும், மறுபுறம் “இவரு என்னங்க அந்த காலத்து கணக்கை இப்போ தீர்க்கிறாரா?” எனப் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளிடம் இப்படி அதிகக் கட்டணம் வசூலிப்பது சரியா தவறா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், இந்த வீடியோ இப்போது செம ட்ரெண்டிங்கில் உள்ளது.
