சமூக வலைதளங்களில் எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் செய்யும் ஆபத்தான காரியங்கள் தற்போது உயிர் பயத்தை காட்டி வருகிறது.

அந்த வகையில், அரைகுறையாகக் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தின் மாடியில் குதித்து ஓடுவது போல ‘மாஸாக’ ரீல்ஸ் எடுக்க முயன்ற இளைஞர் ஒருவருக்குப் பயங்கர விபத்து நேர்ந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Delhilastnight (@delhilastnight)

வேகமாக ஓடி எகிறி குதிக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி நிலைதடுமாறி விழுந்துள்ளார். அப்போது அங்கு நீட்டிக்கொண்டிருந்த கூர்மையான இரும்பு கம்பி ஒன்று அந்த இளைஞரின் வயிற்றைக் கிழித்து உள்ளே இறங்கியது.

இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காகத் தனது உயிரையே பணயம் வைத்து இளைஞர்கள் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“பிரபலம் தேடி போய், இறுதியில் உயிருக்கே உலை வைத்துக் கொள்ள வேண்டுமா?” என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.