உலகப்புகழ் பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்கா, 2026-ஆம் ஆண்டு குறித்து வெளியிட்டுள்ள கணிப்புகள் இப்போது காட்டுத்தீயாகப் பரவி, நகைப்பிரியர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது கணிப்பின்படி, 2026-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய ‘நிதி நெருக்கடி’ (Financial Crisis) ஏற்படும் என்றும், வங்கி அமைப்புகள் நிலைகுலையும் என்றும் கூறப்படுகிறது.
மக்கள் காகிதப் பணத்தின் மீதான நம்பிக்கையை இழக்கும்போது, பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை மட்டுமே நாடுவார்கள்; இதனால் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தைத் தொடும் என அவர் எச்சரித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, 10 கிராம் தங்கம் சுமார் ₹1.52 லட்சத்தைத் தாண்டி விற்பனை ஆகி வரும் நிலையில், பாபா வாங்காவின் கணிப்பு உண்மையானால், இதன் விலை ₹2.1 லட்சம் வரை எகிறக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணக்கிட்டுள்ளனர்.
ஏற்கனவே ஈரான் – இஸ்ரேல் போர் மற்றும் உலகளாவிய பணவீக்கத்தால் தங்கம் விலை ஏறுமுகத்தில் இருக்கும் சூழலில், பாபா வாங்காவின் இந்த “கேஷ் கிராஷ்” கணிப்பு நடுத்தர மக்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.
