தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய தொழில்நுட்பங்கள் புகுந்துள்ளன. குறிப்பாக தர்மபுரி, வேலூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய வாக்குச்சாவடிகளில், வாக்காளர்களை வரவேற்க ரோபோட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை வாக்காளர்களுக்குப் பூக்கள் கொடுத்தும், வெயிலில் இருந்து தப்பிக்கத் தொப்பிகளை வழங்கியும் வரவேற்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முதியவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்கு இந்த ரோபோட்டுகள் உற்சாகத்தை அளிப்பதோடு, ஜனநாயகத் திருவிழாவில் ஒரு நவீன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
তামিলনাডু বিধানসভা নিৰ্বাচনৰ ভোটগ্ৰহণ অব্যাহত। ধৰ্মপুৰী ভোটকেন্দ্ৰত দেখা গৈছে ব্যতিক্ৰমী দৃশ্য। হাতত ফুল, মিঠাই লৈ ভোটকেন্দ্ৰটোত ঘূৰিছে ৰবট। নতুন ভোটাৰক আদৰিবলৈ ব্যতিক্ৰমী পদক্ষেপ।#TamilNaduElections #Robot pic.twitter.com/qqWkWOLmcM
— News Daily 24 (@nd24_news) April 23, 2026
வாக்குச்சாவடிகளில் ரோபோட்டுகள் பூக்கள் கொடுக்கும் இந்த ‘கியூட்’ வீடியோக்கள் இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
