ஆப்பிரிக்காவின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பகுதிகளில் நிலவும் பசி மற்றும் பட்டினியின் கோர முகத்தை விளக்கும் ஒரு உருக்கமான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கச் சென்ற ஒரு தன்னார்வலரின் மடியில், ஒரு சிறுவன் தலை சாய்த்து தேம்பித் தேம்பி அழும் காட்சி காண்போர் கண்களைக் குளமாக்குகிறது. அந்தச் சிறுவனுக்குத் தேவைப்பட்டது வெறும் உணவு மட்டுமல்ல, ஒரு பாதுகாப்பான அணைப்பும் ஆறுதலும் தான் என்பதை அந்த புகைப்படம் உணர்த்துகிறது.

உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படும் போது, வரிசையில் நின்ற அந்தச் சிறுவன் திடீரென அந்த விருந்தினரின் மடியில் சாய்ந்து கொண்டார். நீண்ட நாட்களாகப் பசியிலும் தனிமையிலும் வாடிய அந்தப் பிஞ்சு உள்ளம், அன்பு காட்டிய ஒரு மனிதரைக் கண்டதும் தனது வேதனையை கண்ணீராக வெளிப்படுத்தியது.

 

“இந்தக் குழந்தையின் கண்ணீர் உலக நாடுகளின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும்” என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். பசியை விடவும் பெரிய வலி இவ்வுலகில் எதுவுமில்லை என்பதற்கு இந்தச் சிறுவனின் கண்ணீரே சாட்சியாக நிற்கிறது.