ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான மோதலைத் தொடர்ந்து, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் ஆசிய நாடுகளில் கடும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து சீனா முதல் முறையாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

மேலும் சீன அதிபர் ஷி ஜின்பிங், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடியபோது, ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சர்வதேச நீர்வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி, பிராந்திய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பொது நலன்களோடு நேரடித் தொடர்புடையது என்று சீனா குறிப்பிட்டுள்ளது.

இதனால் ஈரானிய கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடு என்பதால், இந்த வழித்தடம் மூடப்படுவது சீனாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, அமைதியைப் பேணவும், உலகளாவிய வர்த்தகம் பாதிக்கப்படாமல் இருக்கவும் ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற போக்குவரத்தைப் பராமரிக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை விடுத்துள்ளது.