பல்வேறு தொகுதிகளில் ₹8,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்துத் தேர்தல் ஆணையம் (ECI) சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. செந்தில்வேல் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

​குறிப்பாக பாலக்கோடு, பர்கூர் மற்றும் கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் கூப்பன் வழங்கியதாகக் கூறப்படும் புகார் குறித்து சம்பந்தப்பட்ட கட்சிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் உறுதிபடக் கூறியுள்ளது.