தமிழக அரசியல் களம் எப்போதும் புதுமைகளுக்கும் பிரம்மாண்டங்களுக்கும் பெயர் பெற்றது. அந்த வகையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஏற்கனவே கும்பகோணத்தில் விஜய்யின் உருவத்தை ஹோலோகிராம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் தத்ரூபமாகக் காட்டி அதிரடி காட்டிய அக்கட்சி, தற்போது கோவையில் ஒரு படி மேலே சென்று ஒரு நடமாடும் ரோபோவை பிரச்சாரக் களத்தில் இறக்கியுள்ளது.
<a href=”http://

“>

கோவை தொகுதி வேட்பாளருடன் வீதி வீதியாக நடந்து சென்ற இந்த ரோபோ, கட்சியின் துண்டை கழுத்தில் அணிந்து கொண்டு கட்சித் தொண்டர்களோடு கம்பீரமாக நடைபோட்டது. இந்த வினோதமான காட்சியைக் கண்ட பொதுமக்கள் வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்தனர்.

வெறும் மேடைப் பேச்சுகளோடு நின்றுவிடாமல், ஹோலோகிராம், ஏஐ குரல் மற்றும் ரோபோ எனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதில் தவெக புதுமையான அரசியலை முன்னெடுத்து வருகிறது.