சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி திமுக அரசைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.
குறிப்பாக, மாற்றுத்திறனாளி ஒருவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதாகக் கூறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வை எடப்பாடி பழனிசாமி மேடையில் சுட்டிக்காட்டினார்.
அந்தப் புகாரில் இருந்த முரண்பாடுகளை அவர் கிண்டலாகப் பேசியதோடு, சம்பந்தப்பட்ட புகைப்படத்தையும் பொதுமக்களிடம் காண்பித்தார். இதைக் கேட்டு அங்கிருந்த மக்கள் பலத்த சிரிப்பொலி எழுப்பியதால் பிரச்சாரக் களம் கலகலப்பானது.
போட்டோ காட்டி பேசிய இபிஎஸ்! சிரித்த மக்கள்! | EPS | ADMK | MK STALIN | DMK#EdappadiPalaniswami pic.twitter.com/5BogmOjCRX
— PttvOnlinenews (@PttvNewsX) April 19, 2026
“>
திமுகவினர் உண்மைத்தன்மையை ஆராயாமல் விளம்பரத்திற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று அவர் விமர்சித்துப் பேசியது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
