மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஜார்கிராம் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். கூட்டம் முடிந்து திரும்பும்போது, திடீரென தனது வாகன அணியை நிறுத்தச் சொன்ன பிரதமர், சாலையோரம் இருந்த ஒரு சாதாரண கடைக்குச் சென்றார்.

அங்கு அந்த கடைக்காரரிடம் மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற காரசாரமான காரப்பொரி செய்து தருமாறு கேட்டு, அதை ரசித்து ருசித்தார். நான்கு பிரசாரக் கூட்டங்களுக்கு இடையே கிடைத்த சிறிய இடைவெளியில் இந்த சுவையான உணவைச் சாப்பிட்டதாக மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்தக் கடையில் காரப்பொரி சாப்பிட்ட பிறகு, பிரதமர் மோடி தனது பாக்கெட்டில் இருந்து 10 ரூபாயை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்தார். ஆனால், அந்த நபர் பிரதமரிடம் காசு வாங்கத் தயங்கி மறுத்தார்.

உடனே மோடி தனதுக்கே உரிய பாணியில், “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது தாதா, காசை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று அன்பாகக் கூறி வற்புறுத்தி வழங்கினார்.

“>

 

மேலும், காரப்பொரியில் வெங்காயம் சேர்க்கவா என்று கடைக்காரர் கேட்டதற்கு, “தாராளமாகச் சேர்க்கலாம், நான் வெங்காயம் சாப்பிடுவேன், ஆனால் யாருடைய புத்தியையும் சாப்பிடமாட்டேன்” என்று அவர் கிண்டலாகப் பதிலளித்தது அங்கிருந்தவர்களிடையே பலத்த சிரிப்பலை ஏற்படுத்தியது.