உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்பத் ஹோட்டலில், தனது முன்னாள் காதலன் கில்லோ என்பவரை பிரீதி என்ற பெண் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்குப் பிறகு பிரீதி தனது வாழ்க்கையைத் தொடர்ந்த போதிலும், கில்லோ அவர்களது பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும், அவரது கணவருக்கு அனுப்பி விடுவதாகவும் கூறி மிரட்டி வந்துள்ளார்.
இந்த மிரட்டல் காரணமாக, பிரீதியை அடிக்கடி ஹோட்டல் அறைக்கு வரவழைத்து அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சித்திரவதையினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரீதி, இதற்கு ஒரு முடிவு கட்டத் தீர்மானித்தார்.
சம்பவத்தன்று, “இன்று நீ வரவில்லை என்றால் எல்லா வீடியோக்களையும் உன் கணவருக்கு அனுப்பிவிடுவேன்” என்று கில்லோ மிரட்டியதால், பிரீதி தனது பையில் சுத்தியல் மற்றும் கத்தியை மறைத்து எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குச் சென்றுள்ளார்.
उसने कहा… आज नहीं आई तो तेरी सारी वीडियो तेरे पति को भेज दूंगा। वोह मिलने आई तो Ex को मार दिया
UP के आगरा में होटल ताजपथ में पुराने बॉयफ्रेंड खिल्लो का क़त्ल करने वाली प्रीति ने पुलिस को बताया पुरानी वीडियो व फोटो वायरल करने की धमकी देकर वह उसे बार बार होटल रूम में बुलाता था।… https://t.co/gtZqrwBdCw pic.twitter.com/SA95K4eTph
— TRUE STORY (@TrueStoryUP) April 18, 2026
“>
அங்கு கில்லோவிற்கு மது ஊற்றிக் கொடுத்து, அவர் போதையில் இருந்த சமயம் பார்த்து அவரைத் தாக்கி கொலை செய்துள்ளார். போலீஸ் விசாரணையில், தற்கொலைக்குத் தூண்டும் அளவிற்குத் தன்னை அவர் மிரட்டியதால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக பிரீதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
