அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் ஊடகம் ஒன்றிற்கு நேரலை நேர்காணல் (Interview) அளித்துக் கொண்டிருந்த போது, நெறியாளர் கேட்ட மிக முக்கியமான மற்றும் சங்கடமான கேள்விக்கு முறையான பதிலளிக்க முடியாமல் பாதியிலேயே ஆத்திரத்துடன் எழுந்து சென்ற விசித்திரச் சம்பவம் உலகளவில் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல ‘என்பிசி’ (NBC TV) தொலைக்காட்சிக்கு அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டியின் போது, கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் மற்றும் தில்லுமுல்லுகள் நடந்ததாக ட்ரெம்ப் மீண்டும் பழைய குற்றச்சாட்டை முன்வைத்துப் பேசியுள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட தொலைக்காட்சி நெறியாளர், “தேர்தலில் முறைகேடு நடந்தது உண்மைதான் என்றால், அதற்கான முறையான ஆதாரங்கள் (Proofs) எங்கே?” என்று வளைத்து வளைத்து அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுள்ளார்.
இதனால் நெறியாளருக்கும் ட்ரம்பிற்கும் இடையே நேரலையிலேயே கடுமையான வாக்குவாதமும் காரசாரமான மோதலும் வெடித்துள்ளது. நெறியாளரின் அடுத்தடுத்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் கடுமையான கோபத்திற்கு ஆளான அதிபர் டொனால்ட் ட்ரெம்ப், “தேங்க்யூ டார்லிங்” (Thank you Darling) என்று அந்த பெண் நெறியாளரைப் பார்த்து நக்கலாகக் கூறிவிட்டு, தனது சட்டையில் இருந்த மைக் உள்ளிட்ட உபகரணங்களை அவசர அவசரமாகக் கழற்றி அவரிடமே கொடுத்துவிட்டுப் பேட்டியைப் பாதியிலேயே முறித்துக் கொண்டு அங்கிருந்து விறுவிறுவென்று வெளியேறியுள்ளார்.
சர்வதேச அரங்கில் அமெரிக்க அதிபரின் இந்த அநாகரிகமான கோபமும், நேர்காணலை விட்டு ஓடிய காட்சிகளும் தற்பொழுது உலகளாவிய நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கிண்டல்களுக்கு உள்ளாகி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி இணையத்தை அதிர வைத்து வருகிறது.
