மனித உறவுகளையும், பெற்ற தாயின் புனிதத்தையும் கொச்சைப்படுத்தும் வகையிலான ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் அநாகரிகமான விசித்திரச் சம்பவம் ஐக்கிய ராஜ்யத்தில் (UK) அரங்கேறி தற்பொழுது உலகளவில் மிகப்பெரிய சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

வெஸ்ட் (Kim West) என்ற பெண் தனது 19 வயதில் பென் ஃபோர்டு (Ben Ford) என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு வாரத்திலேயே, சில சூழ்நிலைகளால் அவனை வேறொருவருக்குத் தத்து கொடுத்துவிட்டு பிரிட்டன் திரும்பியுள்ளார். சுமார் 30 ஆண்டுகள் கழித்து, கடந்த 2013-ல் அமெரிக்காவின் கொலராடோவில் தனது மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த பென், தனது உண்மையான தாயைத் தேடிக் கண்டுபிடித்துப் பேசத் தொடங்கியுள்ளான். இதனைத் தொடர்ந்து 2014-ல் இவர்கள் இருவரும் நேரில் சந்தித்த போது, சிறுவயதில் ஒன்றாக வாழாததால் இவர்களுக்குள் தாய்-மகன் என்ற பாசப் பிணைப்பு ஏற்படுவதற்குப் பதிலாக, ஒரு விசித்திரமான ஈர்ப்பு ஏற்பட்டு அனைத்து ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் மீறி உடலுறவு வைத்துக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது. தாயின் மீதான இந்த விபரீத மோகத்தால் கண்மூடித்தனமாக மாறிய பென், தனது அன்பு மனைவியையும் பிஞ்சுக் குழந்தைகளையும் நடுத்தெருவில் தவிக்கவிட்டு

, “நான் என் தாயுடன் தான் வாழ்வேன்” என்று கூறி அவர்களுடனேயே குடித்தனம் நடத்தத் தொடங்கியுள்ளான். தற்பொழுது 50 வயதைக் கடந்த கிம் வெஸ்ட் மற்றும் அவரது மகன் பென் ஆகிய இருவரும் தங்களது இந்த உறவை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளனர். மருத்துவ மற்றும் மனநலத் துறையில், பல வருடங்கள் பிரிந்திருந்த இரத்த சொந்தங்கள் திடீரென சந்திக்கும் போது ஏற்படும் இந்த அசாதாரண ஈர்ப்பை ‘ஜெனடிக் செக்ஷுவல் அட்ராக்ஷன்’ (Genetic Sexual Attraction – GSA) என்று அழைக்கின்றனர்.

இருப்பினும், பிரிட்டன் நாட்டுச் சட்டப்படி பெற்ற தாய் மற்றும் மகனுக்கு இடையே இத்தகைய உடலுறவு வைத்துக் கொள்வது (Incest) என்பது கடுமையான மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத மாபெரும் குற்றமாகும். ஒட்டுமொத்த நெறிமுறைகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு சட்டத்திற்குப் பயப்படாமல் இன்னும் ஒன்றாகவே வாழ்ந்து வரும் இந்த விசித்திரத் தம்பதியின் செயல், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான கண்டனங்களைப் பெற்று இணையத்தில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.