உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மருந்து வணிகர் ஒருவர் தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கான்பூர் கித்வாய் நகர் பகுதியில் உள்ள திரிமூர்த்தி குடியிருப்பில் வசிப்பவர் சஷி ரஞ்சன் மிஸ்ரா. மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் இவருக்கும், ரேஷ்மா என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரித்தி, சித்தி (11) என்ற இரட்டைப் பெண் குழந்தைகளும், கண்ணு (6) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில், சஷி ரஞ்சன் தனது இரு மகள்களையும் கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி ரேஷ்மா அளித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
UP के कानपुर में मेडिकल रिप्रेजेन्टेटिव शशि रंजन मिश्रा ने अपनी 11 वर्ष की 2 जुड़वा बेटियों रिद्धि व सिद्धि की गला काटकर हत्या कर दी। यह सूचना बच्चियों की माँ रेशमा ने पुलिस को दी। आरोपी शशि रंजन अरेस्ट है।
क्यों मारा .. नहीं बोल रहा पिता….
हत्यारोपी पिता यह बताने को तैयार… pic.twitter.com/OYjXuRhpSw
— TRUE STORY (@TrueStoryUP) April 19, 2026
போலீசார் அங்கு சென்றபோது, வீட்டின் தரை முழுவதும் இரத்தம் உறைந்து போயிருந்தது. இரண்டு சிறுமிகளின் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டன. சம்பவ இடத்திலேயே இருந்த சஷி ரஞ்சனை போலீசார் உடனடியாக கைது செய்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கே இருந்த ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொலைக்கான காரணம் குறித்து சஷி ரஞ்சன் வாய் திறக்க மறுத்து வருகிறார். போலீசார் நடத்திய முதற்கட்ட சோதனையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன: சஷி ரஞ்சன் தங்கியிருந்த அறையில் மட்டும் 5 சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த அறைக்குள் அவரது மனைவி செல்வதற்கு கூட அனுமதி கிடையாது. இந்த கேமராக்களை எதற்காகப் பொருத்தினார்? மகள்களைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்து அவர் மௌனம் காத்து வருகிறார்.
இதுகுறித்து தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் தீபேந்திர நாத் சௌதரி கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். எதனால் இந்த கொலையை செய்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார். மேலும் காதல் திருமணம் செய்துகொண்டு, பெற்ற மகள்களையே தந்தை கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
