ஜப்பான் நாட்டு சட்டதிட்டங்கள் மற்றும் நேரக்கட்டுப்பாடுகள் எவ்வளவு கடுமையானவை என்பதற்குச் சாட்சியாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மும்பையைச் சேர்ந்த ஆஷிகா ஜெயின் என்ற பெண் தனது குடும்பத்துடன் ஜப்பான் சுற்றுலா சென்றபோது, அங்குள்ள பாரம்பரிய ‘கிமோனோ’ உடைகளை வாடகைக்கு எடுத்து அணிந்துள்ளனர்.
மாலை 5 மணிக்குள் உடைகளைத் திருப்பித் தர வேண்டும் என்ற நிலையில், அந்தக் குடும்பம் வெறும் 37 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளது. ஜப்பானிய நேரப்படி, ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு நபருக்கு சுமார் 650 ரூபாய் (1,100 யென்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
5 பேருக்கும் சேர்த்து பெரும் தொகை அபராதமாக வந்ததால், ஆஷிகா கடைக்காரரிடம் பேரம் பேசியுள்ளார். ஆனால், மொழிப் பிரச்சனை காரணமாக ஆஷிகா பணத்தைத் தர மறுப்பதாக நினைத்த கடைக்காரர், உடனடியாகப் போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் அங்கே ஆஜராக, இந்தியக் குடும்பம் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டது. இறுதியில் போலீஸ் சமரசம் செய்தும், “ரூல்ஸ் இஸ் ரூல்ஸ்” என ஒரு பைசா கூட டிஸ்கவுண்ட் கிடைக்காமல் முழு அபராதத்தையும் கட்டிவிட்டு அந்தக் குடும்பம் தப்பி வந்துள்ளது. “ஜப்பான்ல ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட் பாஸ்” என ஆஷிகா பதிவிட்ட இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் செம வைரல்.
