விவசாய நிலங்களைப் பாதுகாப்பதில் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த சோளக்காட்டு பொம்மைகளின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது போலிருக்கிறது. போலந்து நாட்டின் வார்சா (Warsaw) நகரில், தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்ட ‘ஹியூமனாய்டு’ (Humanoid) எனப்படும் மனித உருவம் கொண்ட ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எட்வர்ட் வார்சாக்கி (Edward Warchocki) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, அச்சு அசலாக மனிதர்களைப் போலவே கைகளை அசைத்து, சைகை காட்டி பன்றிகளை ஓட ஓட விரட்டுகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் சென்சார்கள் மூலம் இயங்கும் இந்த ரோபோக்கள், தோட்டத்தில் விலங்குகள் நுழைவதைக் கண்டறிந்தவுடன் சுதாரித்துக் கொண்டு காவலாளி போலச் செயல்படுகின்றன.

சமூக வலைதளங்களில் 38 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, “தொழில்நுட்பம் விவசாயத்தை வேற லெவலுக்குக் கொண்டு போயிருச்சு” என அனைவரையும் வியக்க வைத்துள்ளது.