பிரிட்டனைச் சேர்ந்த ஜெய்ன் ஹார்ட்மன், தனது தனித்துவமான வாழ்க்கை முறையால் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளார். அவரிடம் 10-க்கும் மேற்பட்ட செயற்கை மூக்குகள் உள்ளன. வெவ்வேறு நிறங்கள் மற்றும் தோற்றங்களில் இருக்கும் இந்த செயற்கை மூக்குகளை, தனது தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப அவர் மாற்றிக்கொள்கிறார்.

ஜெய்னின் உண்மையான மூக்கு 2017-ஆம் ஆண்டு ஆட்டோ இம்யூன் நோய் காரணமாக அகற்றப்பட்டது. அதன்பிறகு அவர் செயற்கை மூக்கைப் பயன்படுத்தி வருகிறார். மூக்கை இழந்திருந்தாலும், தன்னால் இயல்பாக சுவாசிக்க முடிவதாகவும், வாசனைகளை உணர்வதில் பிரச்னை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

</

 

View this post on Instagram

 

A post shared by Jayne Hardman (@jayneyhardman)

p>

செயற்கை மூக்கை பொருத்துவதற்காக ஜெய்னின் முகத்தில் மூன்று சிறிய காந்தங்கள் பொருத்தப்பட்டுள்ளன. புருவங்களுக்கு இடையில் ஒன்று, முகத்தின் இருபுறமும் தலா ஒன்று என அமைந்துள்ள இந்த காந்தங்களின் உதவியுடன் செயற்கை மூக்கை எளிதாக பொருத்தி, தேவையான நேரத்தில் அகற்றவும் முடிகிறது.

சமூக வலைதளங்களில் ஜெய்ன் பகிரும் வீடியோக்களைப் பார்த்த பலரும் அவரது வாழ்க்கை குறித்து ஆர்வமாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். வெவ்வேறு வடிவங்களிலும் நிறங்களிலும் இருக்கும் செயற்கை மூக்குகளை அவர் பயன்படுத்தும் விதம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, விருந்துகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக அவர் தேர்வு செய்யும் செயற்கை மூக்குகள் குறித்தும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.