துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் (Kahramanmaraş) பகுதியில் உள்ள மருத்துவமனையில், 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்தபோது, அங்கிருந்த செவிலியர் ஒருவரின் கொடூரமான தாக்குதலால் அந்தப் பிஞ்சு குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும், அந்தக் குழந்தைக்கு ஏன் ஊனம் ஏற்பட்டது என்ற உண்மை நீண்ட காலமாக ரகசியமாகவே இருந்துள்ளது.
சமீபத்தில் இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உலகையே அதிரவைத்துள்ளது. அந்த வீடியோவில், செவிலியர் குழந்தையை மிகவும் கொடூரமாகக் கையாள்வது பதிவாகியுள்ளது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில், அந்தச் செவிலியருக்கு தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு பிஞ்சு குழந்தையின் வாழ்வையே சிதைத்தவருக்கு இந்தத் தண்டனை போதாது என சமூக வலைதளங்களில் பலரும் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
