கொல்கத்தாவின் ராணிகுதி பகுதியில் ஆன்லைன் மூலம் பழகிய பெண்ணை நம்பி டேட்டிங் சென்ற வாலிபர் ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நீண்ட நாட்களாகப் பழகி வந்த அந்தப் பெண் கேட்டுக் கொண்டதன் பேரில், அவர் குறிப்பிட்ட ஒரு ‘கப்பல் கேஃபே’-விற்கு அந்த இளைஞர் சென்றுள்ளார். அங்கு இருவரும் காபி குடித்துவிட்டு, ஹுக்காவும் அருந்தியுள்ளனர். ஆரம்பத்தில் எல்லாம் சரியாகச் செல்வதாகவே அந்த இளைஞர் நினைத்துள்ளார்.

​ஆனால், விற்கப்பட்ட பொருட்களை விட பல மடங்கு அதிகமாக அதாவது ரூ. 8500-க்கு பில் போடப்பட்டதைக் கண்டு அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அந்தப் பெண் அங்கிருந்து நைசாக நழுவ, கேஃபே ஊழியர்கள் அந்த இளைஞரைச் சூழ்ந்து கொண்டு மிரட்டியுள்ளனர். இது திட்டமிடப்பட்ட ஒரு கும்பல் மோசடி என்பதும், அந்தப் பெண்ணும் கேஃபே நிர்வாகமும் இணைந்தே இந்தத் தில்லுமுல்லுவில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. அறிமுகம் இல்லாதவர்களுடன் டேட்டிங் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.