ஜலந்தரின் ஹர்நாம்தாஸ்புரா பகுதியில் உள்ள ‘வெஸ்ட் அண்ட் வெஸ்டர்ன் யூனியன்’ டூர் அண்ட் டிராவல்ஸ் கடையில் நேற்று பட்டப்பகலில் துணிகர கொள்ளை அரங்கேறியுள்ளது. கடையில் இருந்த பெண் ஊழியர் தனது கைபேசியில் மும்முரமாக இருந்ததை நோட்டமிட்ட மூன்று பேர் கொண்ட கும்பல், சினிமா பாணியில் கைவரிசை காட்டியுள்ளது. முதலில் கருப்பு நிற சட்டை அணிந்த நபர் டிக்கெட் எடுப்பது போல் வந்து பேச்சுக் கொடுத்துள்ளார், அந்தப் பெண் கவனிக்காத நேரத்தில் மற்ற இருவர் உள்ளே புகுந்துள்ளனர்.

​பின்புறமாக வந்து அந்தப் பெண்ணின் வாயைப் பொத்தி திணறடித்த கொள்ளையர்கள், கல்லாவிலிருந்த ரூ. 1,08,000 ரொக்கப் பணத்தை அள்ளிச் சென்றனர். இந்த முழுச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து விசாரணை நடத்திய போலீசார், முக்கிய குற்றவாளியான குர்தீப் என்பவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மற்ற இருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.