பாகிஸ்தானின் லாகூர் நகரில் கடத்தப்பட்ட சிறுமி ஒருவரை, இரண்டு சகோதரர்கள் மிகத் துணிச்சலாக மீட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத சந்துக்குள் ஒரு நபர் அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வதைக் கண்ட அந்த இளைஞர்கள், பின் தொடர்ந்து சென்று சிறுமியை தக்க சமயத்தில் காப்பாற்றினர். அதோடு அந்த நபரை இளைஞர்கள் துரத்தி துரத்தி அடித்தனர்.

​சிறுமியைப் பாதுகாப்பாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞர்களுக்கு உற்சாகமாகப் பாராட்டு தெரிவித்தனர். இந்த நெகிழ்ச்சியான மற்றும் வீரமான காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்த இளைஞர்களின் துணிச்சலைப் பாராட்டி “ரியல் ஹீரோக்கள்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.