தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலேயே இந்த மறுவரையறை அமையும் என்றும், இதனை வீணாகப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

​மேலும், மகளிருக்கான இடஒதுக்கீடு கிடைப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதாக ஈபிஎஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பெண்களிடையே மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதால் திமுக திட்டமிட்டு நாடகமாடுவதாகவும், பெண்களின் உரிமையைப் பறிக்க நினைக்கும் முதலமைச்சரின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தனது பேட்டியில் கடுமையாகச் சாடியுள்ளார்.