சமூக ஊடகங்களில் தற்போது ஒரு சிறுவனுக்கும் வேட்டைப் பறவையான பருந்துக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பொதுவாக காட்டுப் பறவைகள் மனிதர்களைக் கண்டால் விலகிச் செல்லும் இயல்புடையவை, ஆனால் இந்த வீடியோவில் ஒரு சிறுவன் திறந்தவெளியில் நின்றபடி வானத்தைப் பார்த்து சத்தமிடுகிறான். அவனது குரலைக் கேட்டவுடன், மிக உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு பருந்து மெல்ல மெல்ல கீழே இறங்கி வருகிறது.

எந்தவித பயமும் இன்றி, அந்தப் பறவை நேராக வந்து சிறுவனின் கையில் அமர்வது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுவன் பருந்தைக் கண்டு சற்றும் பயப்படாமல், மிகவும் இயல்பாக அதனுடன் பழகுகிறான்.

வானத்தின் ஆபத்தான வேட்டைக்காரன் என்று அழைக்கப்படும் பருந்து, ஒரு குழந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வந்து அமரும் இந்தக் காட்சி இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by ज़िन्दगी गुलज़ार है ! (@zindagi.gulzar.h)

“>

‘zindagi.gulzar’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், சிறுவனுக்கும் பறவைக்கும் இடையிலான இந்த அபூர்வமான பிணைப்பைக் கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.