சமூக வலைதளங்களில் விதவிதமான உணவு வீடியோக்கள் பகிரப்படும் வேளையில், வீணாக்கப்படும் உணவின் மதிப்பை உணர்த்தும் வகையில் ஒரு சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆடம்பர உணவுகளோ, அறுசுவை உணவுகளோ இன்றி, வெறும் காய்ந்துபோன பழைய ரொட்டித் துண்டுகளைச் சாலையோரம் அமர்ந்து அந்தச் சிறுவன் பசியோடு உண்ணும் காட்சி பார்ப்பவர் நெஞ்சைப் பிழிய வைக்கிறது.
रोटी एक दिन पुरानी थी लेकिन भूख दो दिन पुरानी थी…
वो गरीब दो दिन बासी रोटी आराम से खा गया क्योंकि भूख उस बासी रोटी पर हावी हो गई… pic.twitter.com/B1k482tYzS
— ᴋᴀᴛʏᴀʏᴀɴɪ (@ItsKtyni) April 13, 2026
உணவை வீணாக்குபவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ள இந்த வீடியோவில், அந்த ரொட்டி எவ்வளவு கடினமாக இருந்தாலும் எவ்வித புகாரும் இன்றி அவன் ரசித்து உண்கிறான். “பசியை அறியாதவர்களே ருசியைப் பற்றிப் பேசுவார்கள்” என நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து, பசியின் கொடுமையையும் உணவின் அவசியத்தையும் உருக்கமாகப் பேசி வருகின்றனர்.
