தண்ணீர் பூங்கா ஒன்றில் உள்ள வெளிப்படையான (Transparent) வாட்டர் ஸ்லைடில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள், பாதியில் திடீரென தண்ணீர் நின்றதால் உள்ளேயே சிக்கிக்கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. வழுக்கிக் கொண்டு செல்ல வேண்டிய பாதையில் தண்ணீர் இல்லாததால், மக்கள் நகர முடியாமல் கைகால்களை அசைத்து மெதுவாக ஊர்ந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
某地水世界的透明水滑梯突然停水,游客困在其中,网友笑称像极了蠕动的大肠。🤣 pic.twitter.com/D8tfEwn8Fg
— 作家崔成浩 (@cuichenghao) April 14, 2026
இந்த சம்பவம் உண்மையில் நடந்ததா அல்லது ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டதா என்பது பற்றிய தகவல் உறுதியாக தெரியவில்லை. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், அந்த வெளிப்படையான குழாய்க்குள் மக்கள் நெளிந்து செல்வதைப் பார்த்து, “இது பார்ப்பதற்கு அப்படியே மனித உடலின் பெருங்குடல் (Large Intestine) இயங்குவது போலவே இருக்கிறது” என கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். ஜாலியாகப் பொழுதுபோக்கச் சென்ற இடத்தில், இப்படி ஒரு ‘உயிருள்ள உடற்கூறியல்’ (Human Anatomy) காட்சியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என இணையவாசிகள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
