சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு மருத்துவமனையில் பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை, வழக்கத்திற்கு மாறாகத் தானாகவே எழுந்து உட்கார்ந்திருப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது.
பொதுவாக பிறந்த குழந்தைகள் கழுத்து நிற்கவோ அல்லது உட்காரவோ பல மாதங்கள் ஆகும் நிலையில், இந்த குழந்தை தனது ஒரு கையை ஊன்றி, மற்றொரு கையை வாயில் வைத்தபடி ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் அமர்ந்திருப்பது பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “பிறந்த உடனே வாழ்க்கையின் கஷ்டங்களை இந்தக் குழந்தை புரிந்து கொண்டுவிட்டது போலிருக்கிறது” என்று வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், ஒரு பச்சிளம் குழந்தை இப்படி தானாக எழுந்து உட்காருவது அறிவியல் பூர்வமாக சாத்தியமற்றது என்பதால், இது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறாகவோ அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவாகவோ இருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. உ
View this post on Instagram
“>
ண்மை எதுவாக இருந்தாலும், இந்தக் குழந்தையின் வினோதமான செயல் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
