பணம், நகையைத் திருடிய காலம்போய், இப்போது வீடுகளுக்கு வெளியே அழகுக்காக வைக்கப்பட்டிருக்கும் செடிகளை ஒரு பெண் குறிவைத்துத் திருடும் சிசிடிவி காட்சி இணையத்தில் அதிரவைத்துள்ளது. அந்தப் பெண்மணிக்கு அருகே கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதோ அல்லது ஆட்கள் நடமாடுவதோ துளியும் பயத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம்.
Nem as câmeras e tampouco pessoas próximas foram o suficiente para impedi-la.
Nem as plantas estão em paz. pic.twitter.com/Q4mZfFl4TO
— Sidnelson (@SidnelsonEu) April 14, 2026
யாராவது பார்க்கிறார்களா என்று கூடக் கவலைப்படாமல், பூந்தொட்டியில் உள்ள செடிகளை வேரோடு பிடுங்கிச் செல்லும் இந்தப் பெண்ணின் செயல் நெட்டிசன்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. “பார்க்க லட்சணமா வந்துட்டு இப்படிச் செடி திருடலாமா?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த ‘தாவரத் திருடி’ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
