காதலில் விழுந்தால் உலகத்தையே மறந்துவிடுவோம் என்பது பழைய மொழி. ஆனால், “உலகத்தையே மறந்தாலும் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க” என்கிறது 2026-ன் அதிரடி மருத்துவ ஆய்வு. உங்கள் துணையை நீங்கள் காதலுடன் முத்தமிடும்போது, உமிழ்நீர் வழியாகச் சில ‘அழைக்காத விருந்தாளிகள்’ உடலுக்குள் நுழைந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, ‘சீலியாக்’ (Celiac Disease) எனும் பாதிப்பு உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
உங்கள் துணையின் எச்சில் வழியாக ‘குளுட்டன்’ (Gluten) எனும் புரதம் கடத்தப்படுவதால், அது குடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதற்குத் தீர்வாக முத்தமிடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை, முத்தமிடுவதற்கு முன்னால் ஒரு அரை கிளாஸ் தண்ணீர் குடித்தாலே இந்த ஆபத்து 99% குறைந்துவிடுகிறதாம். அதேபோல் ‘கிஸ்ஸிங் டிசீஸ்’ (Kissing Disease) எனப்படும் வைரஸ் பாதிப்புகளும் இதன் மூலம் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. எனவே, ரொமான்ஸிற்கு நடுவில் ஆரோக்கியத்தையும் கவனிக்க ஒரு கிளாஸ் தண்ணீர் இப்போது ‘மஸ்ட்’ ஆகிவிட்டது!
