நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதிகளைக் குறைக்கக் கூடாது என்றும், இது குறித்துப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாநில அரசுகளுடன் ஆலோசிக்காமல் தன்னிச்சையாகச் சட்டத் திருத்தம் கொண்டு வருவது ஜனநாயக விரோதச் செயல் என்றும், இது மாநில உரிமைகளைப் படுகொலைசெய்வதற்குச் சமம் என்றும் அவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
<a href=”http://

“>

தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு ஏற்பட்டால் அல்லது வட மாநிலங்களுக்குப் கூடுதல் வலிமை அளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டால், தமிழகம் முழுவதும் மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள் என முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

இது தேர்தலுக்கான பேச்சல்ல, கொள்கை ரீதியான எதிர்ப்பு என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டிற்குத் தவறிழைத்தால் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் இதுவே மத்திய அரசுக்கான இறுதி எச்சரிக்கை என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.