இன்றைய அவசர உலகில் மற்றவர்களுக்கு என்ன நேர்ந்தால் நமக்கென்ன என்று கடந்து செல்பவர்களுக்கு மத்தியில், இந்தச் சிறுவன் செய்த செயல் இணையவாசிகளைக் நெகிழ வைத்துள்ளது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாகப் பின்னோக்கிச் சரிந்து இறக்கத்தில் உருளத் தொடங்கியது. இதைப் பார்த்த அந்தச் சிறுவன், ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று, ஒரு பெரிய கல்லை எடுத்து காரின் சக்கரத்தில் வைத்துத் தடுத்தான். இதனால் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு, அந்த காரும் சேதமடையாமல் தப்பியது.
Esse garoto viu o carro de uma pessoa deslizando, correu rapidamente e colocou uma pedra para que ele não descesse. Fez o bem sem esperar nada em troca. 🙏 pic.twitter.com/flJb2NSaGU
— Will (@willmourds) April 10, 2026
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், பிரதிபலன் கருதாமல் அந்தச் சிறுவன் காட்டிய இந்தச் சமயோசித புத்தி இப்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. “நல்ல உள்ளங்களுக்கு வயசு ஒரு தடையே இல்லை” என நெட்டிசன்கள் அந்தச் சிறுவனைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் ஓடிச் சென்று உதவிய அந்தச் சிறுவனின் வீரத்தையும், மனிதாபிமானத்தையும் காட்டும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
