தமிழக முதலமைச்சராகத் தளபதி விஜய் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் இன்னும் பெரம்பூர் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்திக்கவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரவி வந்தது. எதிர்க்கட்சிகள் இதனைப் பெரிய அளவில் விமர்சித்து வந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆனந்த்ஜித் இதற்கு அதிரடியான விளக்கத்தை அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முதல்வர் விஜய் எங்கும் செல்லவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், அவர் மக்கள் பிரச்சனைகளை நேரடியாகத் தெரிந்துகொள்ள சத்தமில்லாமல் களமிறங்கி வேலை பார்த்து வருகிறார் என்றும் கூறி அதிர வைத்துள்ளார்.முதலமைச்சர் விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து இடங்களுக்கும் யாருக்கும் தெரியாமல், மாறுவேடத்தில் சென்று ரகசியமாக ஆய்வு நடத்தி வருகிறார் என்று ஆனந்த்ஜித் சஸ்பென்ஸை உடைத்துள்ளார்.
எந்தெந்த பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளது, எங்கு அடிப்படை வசதிகள் இன்னும் மக்களைச் சென்றடையவில்லை என்பது போன்ற அத்தனை விபரங்களும் மாறுவேட ஆய்வின் மூலம் முதல்வருக்கு அக்குவேறா ஆணிவேறா தெரிந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ரகசிய விசிட் குறித்த தகவல் தவெக தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் இப்போது காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
