பிரேசில் நாட்டின் மாஸியோ பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், விளையாட்டு மைதானத்தின் நுழைவாயிலில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் ஒருவன் உயிருக்கு போராடினான். இந்த பதறவைக்கும் காட்சியில், மின்சாரம் தாக்கி துடித்துக்கொண்டிருந்த சிறுவனை அவனது நண்பன் சற்றும் யோசிக்காமல் மீட்டெடுக்க முயற்சி செய்தான்.

​சிறுவனை காப்பாற்ற முயன்றபோது அந்த நண்பனையும் மின்சாரம் தாக்கியது, ஆனாலும் தளராத துணிச்சலுடன் போராடி அவனை மின்சார பிடியிலிருந்து விடுவித்து மீட்டான். மயிர்இழையில் உயிர் தப்பிய இந்த சிறுவர்களின் வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி இணையவாசிகளை நெகிழ வைத்து வருகிறது.