மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி இடையே கடும் அரசியல் போர் வெடித்துள்ளது. மதுரைக்கு தியாகராஜன் எதுவும் செய்யவில்லை என்றும், அவரது தலைக்கனம் தான் அவரது வீழ்ச்சிக்கு காரணம் என்றும் சுந்தர் சி மற்றும் அவரது மனைவி குஷ்பு விமர்சித்தனர்.
இதற்குப் பதிலடி கொடுத்த பழனிவேல் தியாகராஜன், சுந்தர் சி 11-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதால் அவருக்கு எதையும் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை என்றும், குஷ்பு அடிக்கடி கட்சி மாறுபவர் என்றும் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்தன்னை “வெளியூர்க்காரர்” என்று விமர்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சுந்தர் சி, மக்களுக்குத் தேவை புள்ளிவிவரங்கள் அல்ல, நல்ல திட்டங்கள் தான் என்று கூறினார்.
ஆனால், “மதுரைக்காரன்டா” என்று சவால் விட்டுள்ள பழனிவேல் தியாகராஜன், அடிப்படை அறிவு இல்லாதவர்கள் பரப்பும் பொய்களை முறியடிப்பதே தனது கடமை எனத் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி வருவதால், மதுரை மத்திய தொகுதியின் தேர்தல் களம் தற்போது பெரும் பரபரப்பில் உள்ளது.
