அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை (ஏப்ரல் 11) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானின் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இவர்களின் பாதுகாப்பிற்காக இஸ்லாமாபாத் நகரம் முழுவதும் ஒரு சிறைச்சாலை போல மாற்றப்பட்டுள்ளது. சுமார் 11,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கூட்டம் நடைபெறும் செரீனா ஹோட்டலைச் சுற்றியுள்ள 3 கிலோமீட்டர் பகுதி முழுமையாக சீல் வைக்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த அதீத பாதுகாப்பு கெடுபிடிகளால் இஸ்லாமாபாத் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். கடைகள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகள் கூட மூடப்பட்டுள்ளதால், மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தண்ணீர் டேங்கர் லாரிகள் கூட அனுமதிக்கப்படாததால் பொதுமக்கள் குடிநீரின்றித் தவிக்கின்றனர். ஒரு சர்வதேச பேச்சுவார்த்தைக்காகத் தங்கள் நாட்டின் குடிமக்களையே சொந்த வீடுகளுக்குள் சிறைவைத்துள்ள பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
